தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் இருபத்திரண்டு


தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை


பொருளடக்கம்

ஒன்று

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தின் நீதியும் நியாயமும் உன்னதமானவருடைய சிங்காசனத்தின் மகிமை.

இரண்டு

தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராயிருக்கிற கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுகிற சரீரங்களின் மகிமைகள்.

மூன்று

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து.

நான்கு

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்.

ஐந்து

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை.

ஆறு

இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தாகிய சத்திய வசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிற சந்ததியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்.

ஏழு

தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

எட்டு

இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், கர்த்தருடைய பிரமாணங்களையும் பின்பற்றுகிறவர்களூடைய அடையாளங்கள் யோர்தான் நதியை கடந்து வருகிற இடத்தில் முதலாவது சிதறடிக்கப்படுகிறது.

ஒன்பது

இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், கர்த்தருடைய பிரமாணங்களையும் பின்பற்றுகிறவர்களூடைய அடையாளங்கள் சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே ஜனங்களுக்கு கட்டளைகளையிட்ட இடத்தில் இரண்டாவது சிதறடிக்கப்படுகிறது.

பத்து

பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற ஒப்புரவாக்குதலின் உபதேசம் மற்றும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

பதினொன்று

இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், கர்த்தருடைய பிரமாணங்களையும் பின்பற்றுகிறவர்களூடைய அடையாளங்கள் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை போல வருகிற நித்திய ஜீவ வார்த்தைகளின் உபதேசத்தையும் விசுவாசித்து தேவனுடைய சமூகத்தில் வருகிற இடத்தில் நான்காவது சிதறடிக்கப்படுகிறது.

பன்னிரண்டு

தேவன் நம்மை யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து அழைத்திருக்கிறாரே அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

பதின்மூன்று

மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி, அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

பதினான்கு

தேவன் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

பதினைந்து

தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்.

பதினாறு

சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

பதினேழு

சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

பதினெட்டு

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவற்காக. சாட்சியிடுகிற தேவனுடைய வார்த்தைகள்.



Social Media
Location

The Scripture Feast Ministries