தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் இருபத்திமூன்று


பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலுக்கு வருகிறவர்களுடைய கிரியைகள்.


பொருளடக்கம்

ஒன்று

ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆண்டுகொண்டிருந்த மரணத்தையும், வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் அடைத்துப்போட்டிருந்த பாவப்பிரமாணத்தையும்; தேவன் தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தபடியால்: இயேசு கிறிஸ்துவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினின் மூலம் பாதாளத்திற்கும் மரணத்திற்குமுரிய திறவுகோல்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

இரண்டு

இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலின் வல்லமைகளை; ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு; ஆவிக்குரிய சரீரத்தின் மூலம் தேவனுடைய ராஜ்யத்தைக் காண்பதற்கும்,, பிரவேசிப்பதற்கும், தேவனுடைய அறிவாகிய திறவுகோல்களை தேவன் தருகிறார்; இவைகளில் இடறிவிழுகிறவர்களுடைய பின்னிலைமை, முன்னிலைமையைவிட ஏழு பொல்லாத ஆவிகளைக் கூட்டிக்கொண்டு வந்து, அதிக கேடுள்ளதாயிருக்கும்.

மூன்று

கிறிஸ்துவாகிய மூலைக்கல்லின் மேல் தேவனுடைய சபையைக் கட்டுகிறவர்கள்; பாதாளத்திற்கும் மரணத்திற்குமுரிய திறவுகோல்களின் மூலம் அவைகளின் வல்லமைகளை ஜெயங்கொள்ளுகிறபோது ; அறிவாகிய திறவுகோல்களின் மூலம் தேவனுடைய ராஜ்யத்தை திறக்கிறார்கள்; இடறிவிழுகிறபோது அறிவாகிய திறவுகோல்களின் மூலம் தேவனுடைய ராஜ்யத்தை பூட்டிப்போடுகிறார்கள்.

நான்கு

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, தங்கள் இரட்சகரான தேவனை மறந்து; வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்து, தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினபொழுது; அவர்களை தேவன் அழிக்காதபடிக்கு, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் பாதாளம் மரணம் ஆகியவைகளின் வல்லமைகளுடைய திறப்பின் வாயிலே நின்றான்.

ஐந்து

கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, ஏழு ஸ்திரீகளாகிய சபைகளும், மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிற வேதபாரகரும் பரிசேயரும்; ஒரே சரித்திர புருஷனாகிய இயேசு கிறிஸ்துவை பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்கிறபோது: பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலில் இடறிவிழுந்து, மற்றவர்களையும் இடறிவிழும்படி செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆறு

இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பாதாளத்திற்கும் மரணத்திற்குமுரிய திறவுகோல்களினால்; போஜனபானபாத்திரங்களாகிய சரீரத்தின் உட்புறத்தினுடைய வல்லமைகளை ஜெயங்கொண்டு முதலாவது சுத்தமாக்காமல், வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக்குகிறவர்கள் பரலோகராஜ்யத்தில் பிரவேசியாதபடி பூட்டிப்போடுகிறார்கள்; தேவனுடைய அறிவாகிய திறவுகோல்களின் மூலம் பரலோகராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறார்கள்.

ஏழு

பாதாளம் மரணம், ஆகியவைகளின் திறப்பின் வாசலின் வாதைகளினால்; சரீரத்தில் வியாதிப்பட்டிருந்தாலும், ஆவி,ஆத்துமாவில் தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய் கொண்டவனுமாயிருந்தாலும், அவனுக்கு கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய்பூசி; உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுகிறபோது நீங்கள் சொஸ்தமடைவீர்கள்.

எட்டு

யோபு, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டபோது; யோபு தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலையடைவதற்காக செய்ய வேண்டிய தேவனுடைய சித்தத்தின் நீதியின் கிரியைகளை தேவன் வெளிப்படுத்தின பின்பு; யோபின் சிநேகிதனாகிய தேமானியனான எலிப்பாசின் மூலம் யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார்.

ஒன்பது

தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பாதாளம் மரணம், ஆகியவைகளுடைய வாதைகள் திறப்பின் வாசலில் வெளிப்படும்போது: பரிசுத்தவான்களில் மூலம் தேவனிடத்தில் வேண்டுதல் செய்யாமல்; தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்திலிருந்து நீக்கி, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்படுகிறபோது; இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் தன் ஆத்துமாவை மாத்திரம் தப்புவித்துக் கொள்ளமுடியும்.

பத்து

ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடைய திறப்பின் வாசலின் வல்லமைகளை; ஜெயங்கொண்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கைக்கு துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து: சேனைகளுடைய கர்த்தரின் தூதனாகிய தேவனுடைய ஊழியர்கள்; சத்திய வேதத்தின் மூலம் அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பி தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்க வேண்டும்.

பதினொன்று

ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடன் உடன்படிக்கை செய்தவர்களுடைய கிரியைகளை; சீயோனிலே அஸ்திபாரமாகிய மூலைக்கல்லின் மூலம் பரிசோதிக்கும்போது இடறிவிழுகிறவர்கள்: பொய்யை தங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தபடியால்;அவைகளின் வாதைகள் நாள்தோறும் இரவும் பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

பன்னிரண்டு

ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடைய திறப்பின் வாசலின் வல்லமைகளை ஜெயங்கொண்டவர்கள்; தேவனுக்கு பயப்படும் பயத்தோடே இருந்து, தேவனுடைய நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி ஜாக்கிரதையாயிருந்து; தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு மனந்திரும்பி, நீதியின் கிரியைகளூக்கு முன்னேறுகிறவர்கள் மட்டும்; தேவனுடைய உடன்படிக்கையில் ஜீவனும் சமாதானமுமாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்.

பதின்மூன்று

ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடைய திறப்பின் வாசலின் வல்லமைகளை ஜெயங்கொண்டவர்கள்; தேவனுக்கு பயப்படும் பயத்தோடே இருந்து, தேவனுடைய நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி ஜாக்கிரதையாயிருந்து; தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு மனந்திரும்பி, நீதியின் கிரியைகளூக்கு முன்னேற முடியாதவர்களுடைய விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படுகிறபோது: உடன்படிக்கையின் சாபங்களும் வெளிப்படுகிறது.

பதினான்கு

இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடைய திறப்பின் வாசலின் வல்லமைகளை; ஜெயங்கொள்ளுகிறதற்காக: புறம்பான மனிதனுடைய கருமபாவங்களையும், உள்ளான மனிதனுடைய ஜென்ம பாவங்களையும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறபோது தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை பகுத்தறிந்து கொள்ளூகிறார்கள்.

பதினைந்து

இரட்சிப்பின் பாத்திரமாகிய உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக அன்றாட பலியை / எண்ணையாகிய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டு அலட்சியப்படுத்தாமல், எப்பொழுதும் ஆவி, ஆத்துமா,சரீரத்தில் மனந்திரும்பி, நற்கிரியைகளுக்கு முன்னேறுகிறவர்களூம்; தேவனுடைய பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளின் பிரமாணங்களை பின்பற்றுகிறவர்களூம், தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள் மேல் திறப்பானதை அடைத்து, குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறார்கள்.

பதினாறு

தேவனுடைய நாமம் கனஈனம் பண்ணப்படுகிறதை காண்கிறவர்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் உண்டான வித்தியாசங்களை உருவாக்கி, அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பித்து; பூர்வமுதல் பாழாய்க்கிடந்த பரிசுத்த ஓய்வு நாள் பிரமாணங்களின் பொருளை மறைக்காமல்; ஜனங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறபோது; தேவன் தேசத்தை அழிக்காதபடிக்குத் பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலை அடைத்து, தேவனுடைய பிரமாணங்களுடைய எல்லைகள் உடைக்கப்பட்டதை அடைக்கிறார்கள்.

பதினேழு

சேனைகளின் கர்த்தருடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக; நித்திய நியாயத்தீர்ப்பின் ஆவியை உடையவருடைய ஜீவனைக் கொண்டு போதிக்கிற ஊழியக்காரன்; மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று பிரசங்கிக்கிறபோது: கீழ்படியாமல், அந்த சத்தத்தை வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக தொனித்துக் கொண்டிருக்கும்படி அனுப்பினவர்களை; தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பின் மூலம் நித்திய சத்தியத்திற்கு நிலைநிறுத்துகிறபோது; அவைகள், கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறது.

பதினெட்டு

சேனைகளின் கர்த்தருடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக; நித்திய நியாயத்தீர்ப்பின் ஆவியை உடையவருடைய ஜீவனைக் கொண்டு போதிக்கிற ஊழியக்காரன்; மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று பிரசங்கிக்கிறபோது: மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறவர்கள் தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களாகிய பிரமாணங்களை புதிதாய்க் கட்டி நித்திய சத்தியத்தின் மூலம் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார்கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries