தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் இருபத்திநான்கு
தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.
(தேவனாகிய கர்த்தர்: ஆதாமிற்கும், ஆதாமின் மனைவியாகிய ஸ்திரீக்கும், ஸ்திரீயை வஞ்சித்த சர்ப்பமாகிய சாத்தானுக்கும், கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தின் தொடர்புடைய ஆசரிப்பு கூடாரத்தின் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தில் முடிவடைகிறது.)
பொருளடக்கம்
ஆதாமின் குமார்களாகிய காயீனும் ஆபேலும், தங்களுடைய காணிக்கையை கர்த்தருக்கு பலிசெலுத்துகிற விசுவாசத்தில், கருத்து வேறுபட்டதின் மூலம் காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்; அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்குகிறது.
காயீனும், காயினின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகளும், தேவன் அங்கிகரிக்காத .காணிக்கைகளை பலிபீடத்திற்கு கொண்டுவருகிறபோது: தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட சாபங்களின் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கிறவர்கள் யாரும் அவர்களை கொல்லாதபடிக்கு; தேவனுடைய முத்திரை அடையாளத்தை போட்டார்.
இரண்டாம் ஆதாமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பலிபீடத்தின் ஊழியம் செய்து, அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டபோது; முதலாம் ஆதாமின் மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பின் சாபங்கள் நீக்கப்படுகிறது.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
சீயோன் மலையில் உள்ள ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் தேவனுடைய ஆலயத்திலும், பலிபீடத்திலும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் அல்லது பலிபீடத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்திலிருந்து, தேவனை மகிமை படுத்துகிற புறஜாதிகளின் ஆசீர்வாதங்கள்.
கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும் இணைந்து தேவனுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறபோது; ஆதாமின் மனைவியாகிய ஸ்திரீக்கு, கொடுத்த சாபங்கள் நிறைவேறி முடிவடைகிறது.
சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை, பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே தொடர்ந்து நிலைத்திறுத்துவதற்காக: அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததிகளும்; போராடுகிறபோது, ஸ்திரீயை வஞ்சித்த சர்ப்பமாகிய சாத்தானுக்கும், கொடுத்த சாபங்கள் நிறைவேறி முடிவடைகிறது.
தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக்கொண்டவர்கள் பலிபீடத்திற்கு வருகிறபோது மாயை என்னும் ஜல்லடையின் மூலம் ஜாதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு; தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்களிலிருந்து தப்புகிறார்கள்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)