தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் இருபத்தொன்று
உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்
பொருளடக்கம்
ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; தன்னுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவை பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் தன்னுடைய வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.
தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம் நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு தேவனுடைய பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்து, தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிகளுக்காக பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்களில் மூவரில் முதலாம் ஆனவரான, பிதாவாகிய, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்: தேவனுடைய சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக, கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்.
பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய நீதியைக் குறித்து சாட்சியிடுகிறவர்களில், மூவரில் இரண்டாம் ஆனவரான வார்த்தையாகிய கிறிஸ்துவின் ஆவியானவர்: சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக, கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்.
பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய நீதியைக் குறித்து சாட்சியிடுகிறவர்களில், மூவரில் மூன்றாம் ஆனவரான பரிசுத்த ஆவியானவர் தேவநீதியை வெளிப்படுத்துவதற்காக, கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்.
தேவனால் பூமியில் உருவாக்கப்பட்ட ஆதாமும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம் நித்தியமாக இருப்பதற்காக; ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின் பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.
பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற ஒப்புரவாக்குதலின் உபதேசம் மற்றும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான தேவனுடைய நீதியின் கிரியைகள்.
பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற ஒப்புரவாக்குதலின் உபதேசம் மற்றும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)