தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


தலைப்பு பதினைந்து


புஸ்தகம் பதினைந்து


ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.


பொருளடக்கம்

ஒன்று

தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மோசேயினிடத்தில் கொடுக்கப்பட்ட, நியாயப்பிரமாணத்தின் நீதி இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நிறைவேறினபடியால்: தொடர்ந்து வந்த பாவம் மரணம் ஆகியவைகள் கிருபையினால் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய இரட்சிப்பு இலவசமாக ஆரம்பமாகி, இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வசனங்களின் மூலம் தேவனுடைய இரட்சிப்பு கிரியைகளுக்கு முன்னேறுகிறது.

இரண்டு

தேவனுடைய இரட்சிப்பின் வஸ்திரத்தின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களும் அவைகளில் இடறிவிழுகிறவர்களும்.

மூன்று

தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம் ஜென்மசுபாவ புறம்பான மனுஷனையும் அவன் செய்கைகளையும் அழிந்தும், ஆவிக்குரிய உள்ளான மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறதினால் நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு; தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களும் அவைகளில் இடறிவிழுகிறவர்களும்.

நான்கு

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நீதிமான்களும் ஞானிகளும், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை முழுவதுமாக நிறைவேற்றினாலும்: தங்களுடைய விருப்பையாவது, வெறுப்பையாவது, பின்பற்றுகிறவர்களூடைய ஆவிக்குரிய உள்ளான மனுஷன்; பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுடைய அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளாமல் இடறிவிழுந்து ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அதிகமான கசப்பை புசிக்கிறார்கள்.

ஐந்து

கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய தலையாகவும், மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்.

ஆறு

தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறது; இவைகளில் இடறிவிழுகிறபோது அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறது.

ஏழு

தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், தங்களூடைய சந்ததிகளை பெற்றெடுக்க பிரசவ வேதனைபடுகிறது.

எட்டு

கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும், அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததிகளும்; தங்களூடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries